top of page
Watercolor Stain Transparent
120902138_215876993228441_4589151945951973757_n_edited.jpg

டாக்டர் கோ. பரமசிவம்

DR. G. PARAMASIVAM

    முன்னுரை

  அபூர்வாஸ் நிறுவன இயக்குநர் திரு. டாக்டர் கோ. பரமசிவம் அவர்கள் கடந்த இருபது வருடங்களாக வானொலியில் ஆன்மிகம், வரலாறு, அறிவியல், புராணங்கள், வேதங்கள், இதிகாசங்கள், ஜோதிடம், மணியியல், வாழ்வியல் என தான் அறிந்த பல்வேறு விசயங்களை, தேடிப் படித்த பல அரிய தகவல்களை நேயர்களோடு சளைக்காமல் பகிர்ந்து கொண்டு வருகிறார்.

     மனிதன் மனிதனாக வாழவேண்டும், மனித நேயத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். சமயம் கூறும் நன்னெறிகளை கடைபிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து வழிகாட்டி வருகிறார்.

     நலமான வளமான வாழ்க்கைக்கு, கல்விக்கு, ஒழுக்கத்திற்கு, பண்பாட்டிற்கு, நோய் நொடியற்ற ஆரோக்கிய வாழ்விற்கு நம் சமயம் சார்ந்த சடங்குகளும் வழிபாடுகளும், சின்னங்களும் எந்தெந்த வகைகளிலெல்லம் உதவுகின்ற என்பதைப் பற்றியெல்லாம் விரிவாகப் பேசி வருகிறார். மின்னல் எப் எம். திரு. ஆறுமுகம் அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் முகமாய், அவர் தொட்டு பேசிய விசயங்கள் ஏராளம்.

     அப்படி இதுவரை அவர் பேசியதிலிருந்து முக்கிய கருத்துக்களையெல்லாம் திரட்டி எடுத்து புத்தக வடிவில் வெளியீடு செய்கிறோம். முழுமையாக அவற்றை வெளியிட்டால் ஆயிரக்கணக்கான பக்கங்களில் வெளியிட வேண்டியிருக்கும். தற்போது வாழ்வும் வளமும் இரண்டாம் பாகம் வெளியாகிறது. அடுத்த பாகங்களும் தொடர்ந்து வெளிவரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். வாங்கிப் படித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

     நன்றி.

  • YouTube
  • Instagram

©2023 by Thungeesam. Proudly created with Wix.com

bottom of page